யாரெல்லாம் புதினாவை சாப்பிடவே கூடாது... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் புதிய இலையில் பல சத்துக்கள் உள்ளது. ஆனால் இவை சிலருக்கு தீமையையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
புதினா
புதினாவில் வைட்டமின் ஏ, பி1, சி, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது.
செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யவும் புதினா உதவுகின்றது.
மேலும் இதனை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் நீங்குகின்றது.

அதுமட்டுமின்றி தலைவலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைக்கும் புதினா நல்ல மருந்தாக காணப்படுகின்றது.
புதினா எண்ணெய்யை உடம்பில் அப்படியே தேய்க்காமல் பாதாம் எண்ணெய்யுடன் சேர்த்து தேய்க்கவும். ஏனெனில் எரிச்சல், சருமம் சிவத்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் புதினாவை இலையாகவோ, மாத்திரையாகவோ எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சருமத்திற்கு புதினா எண்ணெய்யை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அரிப்பு மற்றும் தடுப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் புதினா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களும் இதனை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
குழந்தைகளுக்கு புதினா எண்ணெய்யை ஒருபோதும் பயன்படுத்துவதே கூடாதாம்.
புதினா எண்ணெய்யை அப்படியே குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை நஞ்சாக மாறிவிடுமாம். மெதுவான இதய துடிப்பு, சுவாசம் விரைவாகுதல், தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, சிறுநீரில் ரத்தம், வலிப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    |