Bigg Boss: பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது களமிறங்கி கலக்கிவரும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பொதுவாக அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. தற்போது தமிழ் பிக் பாஸிலும் சீசன் 9 அட்டகாசமாக செல்கின்றது.
அக்டோபர் மாதம் 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த பிக் பாஸ் 9ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஞாயிற்று கிழமை வரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்களாக கணவன் மனைவி உட்பட நான்கு போட்டியாளர்கள் உள்ளே சென்றனர்.
தற்போது ஒரு மாதம் ஆகியும் ஒன்றுமே செய்யாமல் இருந்த போட்டியாளர்களை வெளுத்து வாங்கி வருகின்றனர். அவ்வாறு உள்ளே சென்றவர்களின் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
சாண்ட்ரா, பிரஜன்
பிக் பாஸ் வீட்டிற்குள் தம்பதிகளாக நுழைந்திருக்கும் சாண்ட்ரா, பிரஜன் இருவரில், சாண்ட்ராவிற்கு நாள் ஒன்றிற்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது. கணவர் பிரஜனிற்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

திவ்யா
பாக்கியலட்சுமி சீரியலில் பேசாத திவ்யா பிக்பாஸில் வெளுத்து வாங்கி வருகின்றார். இவருக்கு 20 ஆயிரம் ரூபாய் நாள் ஒன்றிற்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அமித் பார்கவ்
வைல்டு கார்டு போட்டியாளரான அமித்திற்கு சம்பளமாக நாள் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |