இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பலவீனமான மனம் கொண்டவர்களாம்... ஏன்னு தெரியுமா?
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், காதல், திருமணம், விசேட ஆளுமைகள் என்பவற்றில் குறிப்படத்தக்க ஆதிக்கத்தை கொண்டிருப்பது போல், ஒருவர் பிறந்த மாதமும் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறப்பெடுத்தவர்கள் இயல்பாகவே மனதளவில் மிகவும் பலவீனமானவர்களாக இருப்பார்களாம். இவர்கள் சிறிய விடயங்களுக்கும் அதிகமாக வருத்தப்படும் குணம் கொண்டவர்கள்.

அப்படி எந்த கடினமாக விடயங்களையும் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாத, நெகிழ்ச்சியான உள்ளம் கொண்டவர்கள் பெரும்பாலும் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்கள் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் இரக்க குணம் கொண்டவர்களாகவும், மற்றவர்களின் துன்பத்தை கண்டு மனம் வரும்ந்தும் அளவுக்கு பலவீனமான இதயம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களின் விமர்சனம் மற்றும் துரோகத்தால் படுமோசமாக பாதிக்கப்படுவார்கள். அவர்களை பற்றி ஏளனமாகவும், இகழ்ச்சியாகவும் பேசினால் கூட உலகத்தையே விட்டு போய் விடும் அளவுக்கு பலவீனமாக இருப்பார்கள்.
உணர்வு ரீதியான எந்த விடயமும் மற்றவர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு இவர்களை வலுவாக பாதிக்கும்.
நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக இரக்க குணம் மற்றும் சமூக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்களின் தேவைகளையும், கஷ்டங்களையும் சொல்லாமலேயே புரிந்துக்கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். ஆனால் இவர்களை புரிந்துக்கொள்பவர்கள் மிகவும் அரிது.
அவர்களின் மிகப்பெரிய பலவீனம் அவர்களின் முடிவெடுக்கும் திறனில் காணப்படுகின்றது. வாழ்க்கை முழுவதுமே சரியான முடி வெடுப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். இவர்கள் மற்றவர்களின் வசை சொற்களால் எளிதில் மனதுடைந்து விடுவார்கள்.
மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அவர்கள் அனைத்து விஷயங்களையும் துல்லியமாக கவனிப்பார்கள். ஆனால் இவர்களை இவர்களே எதிர்மறையாக விமர்சனம் செய்துக்கொண்டு கவலைப்படும் குணம் இவர்களிடம் இருக்கும். அதனால் இவர்கள் வாழ்வில் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
அவர்களின் மிகப்பெரிய பலவீனமே அதிகமாக சிந்திப்பதும், சுயவிமர்சனம் செய்து கொள்வதும்தான். இந்த குணத்தால் இவர்கள் அதிக மன அழுத்தத்துக்கும் ஆளாக நேரிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |