ஒரே பார்வை சரித்திரத்தை கண்டுபிடிப்பவர்கள் பிறந்த மாதம் எது? யாராலும் ஏமாத்தவே முடியாது
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு விடயத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அந்த வகையில், குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை புரிந்து கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களிடம் எதையும் மறைத்து பேச முடியாது.
நடமாடும் நிபுணர்களாக இருக்கும் இவர்களிடம் யாராவது பொய்யான விடயத்தை கூறினால் அவர்களின் கண் அசைவு, குரலில் உள்ள தயக்கம் மற்றும் பேச்சு ஆகியவற்றை வைத்து அவர்கள் கூறுவது உண்மையா? பொய்யா என்பதை கண்டுக் கொள்வார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இந்த சக்தி உள்ளது. சக்திவாய்ந்த உள்ளுணர்வு மற்றும் கவனிக்கும் திறன் இரண்டையும் வைத்து மற்றவர்கள் நினைப்பதை தெரிந்து கொள்வார்கள்.
அந்த வகையில், மற்றவர்களை பார்த்தவுடன் அவர்களின் சரித்திரத்தை கூறும் ஆற்றல் கொண்டவர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
நவம்பர் | நவம்பர் மாதம் பிறந்தவர்கள் சக்தி வாய்ந்த உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். மனதில் மறைந்து கிடக்கும் விடயங்களை கூட கண்டுபிடித்து கூறுவார்கள். இதனால் அவர்கள் ஆர்வமாக இருக்கும் துறைகளின் உச்சத்தை அடைவார்கள். நவம்பர் மாதம் பிறந்தவர்களின் கூர்மையான உள்ளுணர்வை சிலர் மற்றவர்களின் ரகசியங்களை தெரிந்து கொள்ள நினைப்பார்கள். மற்றவர்களின் உடல் மொழி மற்றும் செய்கைகளை வைத்து இவர்கள் அதனை தெரிந்து கொள்வார்கள். |
பிப்ரவரி | பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் ஆழ்ந்த பச்சாதாபம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களை சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்துக் கொள்வார்கள். அவர்களிடம் ஏதாவது ஒரு விடயத்தை மறைக்கும் பொழுது அதனை அவர்கள் உணர்வுகளை வைத்துக் கண்டுபிடிப்பார்கள். இப்படியான மனைவி கிடைத்தால் கணவர்கள் தப்பித்துக் கொள்வது கொஞ்சம் கடினம். |
செப்டம்பர் | செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள் தனித்துவமான திறமைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கை அனுபவம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு உள்ள பரந்த இதயம் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மற்றவர்களின் கவலைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். சிறந்த நம்பிக்கையாளர்களாவும் இருப்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).