எந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலியா இருப்பாங்கனு தெரியுமா?
பிறந்த மாதத்தினை வைத்து அதிபுத்திசாலியாக இருக்கும் நபர்களை மிகவும் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் போலவே அவர்களின் பிறந்த மாதமும் மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த மாதம் முக்கியப்பங்கு வகிக்கிறது.
அதன்படி சில மாதங்களில் பிறந்தவர்கள் அசாதாரண புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பதுடன், அவர்கள் எடுக்கும் அனைத்து முடிவும் சரியாகவே இருக்குமாம்.
ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்படுவார்களாம். எந்தவொரு பிரச்சனையையும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்கின்றனர்.
இவர்களின் தனித்துவமான கண்ணோட்டம், மற்றவர்கள் செய்ய முடியாத விடயத்தினைக் கூட எளிதில் செய்து முடித்துவிடுவார்கள். மேலும் சுதந்திரமானவராகவும், பகுத்தறிவு உள்ளவர்களாக இருக்கும் இவர்கள் சொந்த முடிவை எடுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் நிலையான மனநிலை மற்றும் மன உறுதிக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் எப்போதும் எதிர்காலத்தை மனதில் வைத்துள்ளதுடன், எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுக்காமல், நன்கு ஆலோசித்து எடுப்பார்கள்.
ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அனைத்து வாய்ப்புகளையும் கவனமாக பரிசீலிப்பதுடன், தங்களது முடிவிற்கு பொறுப்பேற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்களின் முடிவுகள் பெரும்பாலும் புத்திசாலித்தனமாகவும் நம்பகமானதாகவும் இருக்கும்,
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உள்ளுணர்வு மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்டவராகவும், மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத விடயங்களை எளிதில் புரிந்து கொள்பவராகவும், ஆபத்து ஏற்படும் அதிக புத்திசாலித்தனமாக முடிவுகளையும் எடுப்பார்கள்.
இவர்களின் அச்சமற்ற அணுகுமுறை எந்தவொரு விடயத்தையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள உதவுகின்றது. மிகவும் அரிதாகவே அவர்களின் முடிவுகள் தவறானதாக மாறும், அந்த சூழலிலும் அவர்கள் அமைதியை கடைபிடிப்பார்கள்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த முடிவுகளை எடுப்பவராகவும், உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனைகளில் இவர்களின் முடிவு யாருக்கும் பாதிப்பில்லாமல் இருக்குமாம்.
அவர்கள் வலுவான நீதி உணர்வு கொண்டவர்கள் எப்போதும் நியாயத்தையும், ராஜதந்திரத்தையும் சமநிலைப்படுத்துவதன் மூலம் சரியான முடிவுகளை எடுக்க முயலுவார்கள்.
வெவ்வேறு கோணங்களில் இருந்து விஷயங்களைப் பார்ப்பதில் அவர்கள் திறமையானவர்கள் என்பதால், மக்கள் இயல்பாகவே அவர்களை நம்புகிறார்கள்.