ஆழ்ந்த தூக்கம் வரலையா? இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க
இன்றைய காலத்தில் இரவில் தூக்கமில்லாமல் பலரும் திணறி வரும் நிலையில், சில் தவறுகளை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டுமாம்.
தூக்கம்
பொதுவாக மனிதர்களுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும். நாம் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் வேலை அனைத்தும் தடையாகவே இருக்கும்.
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில், தூக்கமின்மையை பிரச்சனையை பெரும்பாலான நபர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த பிரச்சனை சில நாட்கள் தொடங்கி சில மாதங்கள் வரையும் செல்லும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறு நாம் சரியாக தூங்கவில்லை என்றால், நோய் தாக்கத்திற்கு ஆளாகிவிடுவோம்.
இந்த தூக்கமின்மை பிரச்சனைக்கு நாம் செய்யும் சில தவறுகள் தான் முக்கிய காரணம் ஆகும். அதனை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.
தூக்கமின்மை பிரச்சனைக்கு செய்யும் 5 தவறுகள்
தூங்குவதற்கு முன்பு மின்னனு சாதனங்களை பாவிப்பதை தவிர்க்க வேண்டும். போன், டிவி, லேப்டாப் இவற்றினை பயன்படுத்தும் போது, இதிலிருந்து வரும் நீல ஒளியானது உடலில் தூங்கும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியினைப் பாதிக்கின்றது. ஆதலால் தூங்கும் முன்பு அரை மணி நேரத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
தூங்க செல்வதற்கு முன்பு டீ காபி குடிப்பதை தவிர்க்கவும். காஃபின் உடலை தூண்டி தூக்கத்தை கெடுக்கின்றது. இதனால் இரவில் டீ, காபி இவற்றினை தவிர்க்கவும்.
இரவில் வயிறு நிறைய சாப்பிடுவதையும் தவிர்க்கவும். ஏனெனில் உணவுகள் ஜீரணமாவதற்கு சிரமம் ஏற்படுவதால் தூக்கம் பாதிக்கவும் செய்கின்றது. இரவில் லேசான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், உறங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
சரியான நேரத்தில் தூங்கிவிட்டு, காலையில் விரைவில் எழுந்திருப்பது நல்லதாகும். ஒரு குறிப்பிட்ட நேர அட்டவணையை நாம் கடைபிடிக்க வேண்டும். வெவ்வேறான தூக்கத்தை கடைபிடிக்காமல், சரியான நேரத்திற்கு தூங்கும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
மன அழுத்தம், பதட்டம் இருந்தாலும் தூக்கம் தடைபடும். இவ்வாறான நிலையில் தூங்குவது மிகவும் கடினமாகும். எனவே மன அழுத்தத்தினைக் குறைக்க தினமும் தியானம், உடற்பயிற்சி இவற்றினை மேற்கொள்ள வேண்டும். தூங்கும் முன்பு எதையும் யோசிக்கவும் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |