பாகற்காயுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடாதீங்க... உடம்பிற்கு கெடுதல் ஏற்படுமாம்
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பாகற்காயை சில உணவுகளுடன் சாப்பிடக்கூடாது அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாகற்காய்
அதிகளவு கசப்பு தன்மை கொண்ட பாகற்காய் பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத காயாகவே இருக்கின்றது.
ஆனால் இவ்வாறு நாம் ஒதுக்கி வைக்கும் பாகற்காயில் எண்ணற்ற நன்மைகளும், ஊட்டச்சத்துகளும் இருக்கின்றது.
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஆம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு பாகற்காய் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் பாகற்காய் ஜுஸ் குடிப்பது மிகவும் நல்லதாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி குடற்புழு நீக்கத்திற்கும் பாகற்காய் அருமையான மருந்தாகும். இவ்வாறு பல விதங்களில் நமக்கு பயன்படும் பாகற்காயை எந்த உணவுடன் சாப்பிடக்கூடாது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த உணவுடன் சாப்பிடக்கூடாது?
பாகற்காயை பாலுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது பாகற்காய் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பால் குடிக்கக்கூடாது. ஏனெனில் இவை மலச்சிக்கல், வயிறு வலி மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
KRISANAPONG DETRAPHIPHAT/GETTY IMAGES
இதே போன்று பாகற்காயையும், தயிரையும் சேர்த்து சாப்பிட்டால் சரும பிரச்சனைகள் ஏற்படுவதுடன், தோல் வெடிப்பு பிரச்சனையும் ஏற்படுமாம்.
பாகற்காய் உடன் மாம்பழம் மற்றும் வாழைப்பழத்தினை சேர்த்து சாப்பிடுவது கூடாது. ஏனெனில் மாம்பழம் உடல்சூட்டை அதிகரிப்பதுடன், பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடும் போது வயிறு வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படும். முக்கியமாக செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயமாக சாப்பிடவே கூடாதாம்.
அசைவ உணவான சிக்கன் மற்றும் மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது பாகற்காய் சாப்பிடக்கூடாது, ஏனெனில் உணவின் சுவை கெடுவது மட்டுமின்றி பெரிமான பிரச்சனையும் ஏற்படும்.
மேலும் வெண்டைக்காய் மற்றும் பாகற்காய் இவற்றினை சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் அஜீரண பிரச்சனை ஏற்பட்டு, ஜீரணிப்பதில் சிக்கலும் ஏற்படும்.
முள்ளங்கியையும் பாகற்காயையும் சேர்த்து சாப்பிடவே கூடாதாம். இதுவும் வயிறு சம்பந்தமாக பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், வாந்தி, தலை சுற்றல், குமட்டல், மந்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |