இந்த உணவை பிரிட்ஜில் வைக்காமல் வெளியே வைக்கிறீங்களா? சீக்கிரம் கெட்டுப்போய்விடுமாம்
நாம் வெளியில் வைக்கும் சில உணவுகள் விரைவில் கெட்டுப்போய்விடும் என்பதால் அதனை ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்வோம். அவ்வாறு வெளியில் வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுகள்
சமைத்த சாதத்தினை அதிக நேரம் வெளியில் வைக்க வேண்டாம். இதுவும் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். அதுவே குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் கெடாமல் இருக்கும்.
திரவ உணவான பால் விரைவில் கெட்டுப்போகும் தன்மை கொண்டது. குளிர் சாதனப்பெட்டியில் வைத்தால் கெட்டுப்போகாமால் இருக்கும் இருக்கும். இதே போன்று காய்ச்சியும் வைக்கலாம்.
மேலும் சமைத்த காய்கறிகளை வெளியில் வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். எனவே குளிர்சாதன பெட்டியில் வைப்பது சிறந்தது.
முட்டைகள் வெப்பநிலைக்கு அதிக உணர்திறன் கொண்டவை. அவற்றை நீங்கள் வெளியில் வைத்திருந்தால், விரைவில் கெட்டுவிடும். எனவே அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லது.
இதே போன்று அதிகமான சூரிய ஒளி படாதவாறு குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் வைத்து உருளைக்கிழங்கை சேமிப்பது நல்லது.
ஆப்பிள், பேரிக்காய் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற புதிய பழங்கள் அறை வெப்பநிலையில் வைக்கப்படும் போது விரைவாக கெட்டுவிடும் என்பதால் குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லது.
இதே போன்று பச்சை இறைச்சியை வெளியில் வைத்திருந்தால் விரைவில் கெட்டுப் போய்விடும். ஏனெனில் இதில் இருக்கும் பாக்டீரியா வேகமாக பரவி கெட்டுப்போய் விடுமாம். ஆதலால் குளிர் சாதனப்பெட்டியில் வைப்பது நல்லது.
அதிக கொழுப்பு நிறைந்த நட்ஸ் வகைகள் வெளியே வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஆதலால் இதனை ப்ரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகாமல் இருக்கும். இவ்வாறு வைப்பதால் நீண்ட காலத்தில் அவற்றை புதிதாக வைத்திருப்பது போன்று இருக்கும்.
அறை வெப்ப நிலையில் வைத்தால் சீஸ் சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். ஆதலால் இதனை குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |