டீ-காபி குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த உணவு சாப்பிடாதீங்க
பொதுவாக நம்மிள் பலர் டீ, காபி பிரியர்களாக இருப்பார்கள்.
அவர்களுக்கு டீ இல்லையென்றால் அந்த நாளே விடியாது. அப்படியானவர்கள் காலை, மாலை என இரு வேளைகளும் டீ குடிப்பார்கள். உணவு இல்லாமலும் இருப்பார்கள் ஆனால் டீ இல்லாமல் இருப்பது மிகவும் கடினம் என்பார்கள்.
அப்படி டீ-க்கு அடிமையாக இருப்பவர்கள் குறிப்பிட்ட சில உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனின் டீ, காபி குடிப்பது ஒரு கட்டத்திற்கு பின்னர் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
இந்த நிலையில், டீ பிரியர்கள் குறிப்பிட்ட சில உணவுகளை டீயுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் பொழுது அதுவும் உடல்நல பிரச்சினையாக மாறலாம்.
அந்த வகையில், டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் மறந்தும் எடுத்துக் கொள்ளக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை காரணங்களுடன் பதிவில் பார்க்கலாம்.

பிஸ்கட்
நம்மிள் பலர் டீ, காபி பிரியர்களாக இருப்பார்கள். அப்படி குடிக்கும் பொழுது தவறியும் பிஸ்கட்டை எடுத்து கொள்ளக் கூடாது. ஆனாலும் பிஸ்கட் இல்லாமல் டீ குடிப்பதை சிலர் விரும்புவதில்லை.
வெறும் மைதா, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட்டில் சர்க்கரை அதிகமாக இருக்கும். இது உடல் எடையை அதிகரித்து, செரிமானத்தில் சில கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.

Iron rich foods
டீ, காபியில் பாலிபீனால்ஸ் (Polyphenols) எனும் ஆண்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. அத்துடன் டீயில் Tannin என்ற பாலிபீனால் உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் டீ, காபியுடன் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் அது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும். வெஜிட்டேரியன் இரும்புச்சத்துக்களை Non heme iron டீயில் உள்ள Tannin பாதிக்கிறது.

Oil foods
எண்ணெய் பலகாரங்களுடன் டீ சேர்த்து குடிப்பதை நிறுத்த வேண்டும். உதாரணமாக பஜ்ஜி, சாமோசா, போண்டா போன்ற உணவகளை கூறலாம். ஏனெனின் இது போன்ற உணவுகளில் Unhealthy fats இருக்கும். இதனை டீயுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது செரிமான கோளாறுகள் ஏற்படும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |