பிரஷர் குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்கவே கூடாதாம்
பிரஷர் குக்கர்
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு பிரஷர் குக்கரைத் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இவை நீரிழிவு நோயை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் 40 வயதை நெருங்கும் நபர்கள், குக்கர் சாப்பாட்டை தவிர்க்க வேண்டும். வடித்த சாதத்தை சாப்பிடுவதை பழகிக் கொள்ளவும்.
இவ்வாறு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் பிரஷர் குக்கரில் சில உணவுகளை நாம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
எந்த உணவை சமைக்கக்கூடாது?
பெர்ரி போன்ற பழ வகைககளைக் குக்கரில் வைத்து சமைக்கக்கூடாது. இது பழங்களின் சுவையையும், அமைப்பையும் மாற்றிவிடும்.
வறுத்த உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது. ஏனெனில் சமைக்க உலர்ந்த வெப்பத்திற்கு பதிலாக ஈரப்பதமான வெப்பத்தை பிரஷர் குக்கர் பயன்படுத்துகின்றது.
முட்டையை பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது. வெப்பம் அதிகரிக்கும் போது முட்டை வெடித்து ஒட்டிக் கொள்ளும். சில தருணங்களில் முட்டை வெள்ளைக்கரு முழுவதும் வெளிவரவும் வாய்ப்புள்ளது.
இலை காய்கறிகளான கீரை, முட்டைக் கோஸ் போன்றவற்றினை பிரஷர் குக்கரில் சமைப்பது கூடாது. ஏனெனில் இலை காய்கறிகளால் அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாது. இதனால் அவற்றின் நிறமும், சுவையும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
பால் பொருட்களையும் பிரஷர் குக்கரில் சமைப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அழுத்தம் அதிகரிக்கும் போது பால் பொருட்கள் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |