குழந்தைகளுக்கு இந்த உணவுகளை தவறியும் கொடுக்காதீங்க... பாரிய பிரச்சினை ஏற்படும்
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கு குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகளை குறித்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய உலகில் குழந்தைகளுக்கு காய்கறி, பழங்கள் என்று ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து சத்து இல்லாத பீட்சா பர்கர் இவற்றினை சாப்பிடுவதை ஊக்குவித்து வருகின்றனர் பெற்றோர்கள்.
இவ்வாறான உணவுகள் உடம்பிற்கு ஆரோக்கியம் இல்லை என்று தெரிந்தும் சுவைக்காக இதனை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இங்கு குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்
சர்க்கரை அதிகமான குளிர்பானங்கள் மற்றும் பற்களை சொத்தையாக்கும், சாக்லேட், பிஸ்கட் இவற்றினை கொடுக்கக்கூடாது.
குழந்தையின் உப்புச் சத்தை அதிகரிக்கும் சிப்ஸ், ஸ்நாக்ஸ் இவற்றினை கொடுப்பதை தவிர்க்கவும்.
எண்ணெய்யில் பொறித்த சிக்கன் ப்ரை, பிரென்ச் பிரைஸ் இவற்றினை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் தேவையற்ற கொழுப்புகளை உடலில் சேர்க்கும்.
எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லாத, உடல் எடையை அதிகரிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் பொருட்களை கொடுக்கக்கூடாது.
பீட்சா பர்க்கர் பேக்கரி உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால் இதயத்தில் பிரச்சினை ஏற்படுத்தும்.
தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் காஃபின் அதிகமுள்ள பானங்கள், உணவுகளை தவிர்க்கவும்.
செயற்கை இனிப்புகள் கலந்த பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை தவிர்க்கவும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சோடியம் அதிகம் இருப்பதால் அழற்சியை ஏற்படுத்தும். ஆதலால் இதனை தவிர்க்கவும்.
வேக வைக்காத முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் இவற்றினை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் பாக்டீரியா மூலம் நோய் பரவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |