இந்த தேதியில் பிறந்த பெண்கள் கணவருக்கே அதிர்ஷ்டம்
ஜோதிட சாஸ்திரம் போன்று எண் கணிதம் பல நூற்றாண்டுகளாக ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை பற்றி தீர்மானிப்பதில் முக்கிய இடம் பிடிக்கிறது.
எண்கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் தேவதைகளாக இருப்பார்களாம்.
குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்கள், தங்கள் துணையின் வாழ்க்கையில் செழிப்பு, வெற்றி மற்றும் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
அந்த வகையில், என்னென்ன திகதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
3, 7, 11, 21, 29 தேதிகளில் பிறந்தவர்கள்
எண் கணிதத்தின் படி, 12 மாதங்களில் இந்த 5 தேதிகளில் பிறந்த பெண்கள் லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாக இருப்பார்கள். லட்சுமி தேவியை மகிழ்விக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் பணம் இவர்களிடம் நினைப்பதை விட அதிகமாகவே இருக்கும். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்கள்.
சொந்த வாழ்க்கையை நேர்மறையுடன் வாழ்வார்கள். நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர முயற்சிப்பார்கள். எண் கணிதத்தின் படி, 3, 7, 11, 21 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது தந்தைக்கு நிதி முன்னேற்றம் கிடைக்கும். இவர்கள் பிறந்த உடனே அவர்களது தந்தையின் வேலையில் நல்ல முன்னேற்றம், புதிய வாய்ப்புகள், நிதி ஆதாயம் மற்றும் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
இந்த தேதிகளில் பிறந்த பெண்களின் தந்தைகளுக்கு பணம் பற்றாக்குறை அவ்வளவு சீக்கிரம் வராது. அதே போன்று இவர்கள் திருமணம் செய்த பின்னர் எண் கணிதத்தின் படி, 3, 7, 11, 21 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது தந்தைக்கு பிறகு கணவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கணவருக்கு கொடுப்பார்கள்.
கணவரின் வணிக வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் கணவரின் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அந்த வீட்டில் அமைதி, செழிப்பு அதிகமாகவே இருக்கும். 3, 7, 11, 21 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது குடும்பத்திற்கு அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள் என எண் கணித நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தங்களது குடும்பத்திற்கு நேர்மறை ஆற்றலை வழங்குவார்களாவும், வெற்றிக்கு மறைமுகமாக உதவுவார்களாவும் இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).