Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும்.
இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்களிடம் பிரச்சினை செய்தால், அது பிரச்சினை செய்பவர்களுக்கே பிரச்சினையாக மாறும். அப்படியானவர்கள் பெண்கள் எந்தெந்த தேதியில் பிறந்திருப்பார்கள் ன்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
திமிர் பிடித்த பெண்கள் பிறந்த எண்கள்
எண் -1 | ரேடிக்ஸ் எண் 1-ல் பிறந்த பெண்கள் தலைமைப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். சூரியனின் ஆளுமை கொண்ட இவர்களிடம் அவர்கள் வேலைச் செய்யும் துறையில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். தனித்துவமான படைப்பாற்றல், அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். சவால்கள் நிறைந்த செயல்களை அதிகமாக செய்வார்கள். எவ்வளவு சிரமான காரியமாக இருந்தாலும் தைரியமாக செய்வார்கள். தொழில் வாழ்க்கை, பணியிடம் மற்றும் குடும்ப வாழ்க்கை என அனைத்திலும் தலைமைத்துவ பொறுப்புகளில் இருப்பார்கள். தேவைக்கான பணத்தை மாத்திரம் சம்பாரிப்பார்கள். இவர்கள் தங்கள் தேவைக்காக மற்றவர் உதவியை நாடி இருப்பது கிடையாது. |
எண் 3 | 12 மாதங்களில் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் குரு பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். அதீத புத்திசாலியாக இருக்கும் இவர்களிடம் எந்த காரியம் கொடுத்தாலும் வெற்றி கிடைக்கும். ரேடிக்ஸ் எண் 3 கொண்டவரின் குருவின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பதால் ஆளுமை, நற்பெயர், செல்வாக்கு பெற்று தரும். வாழ்க்கையில் நற்பெயர், செல்வாக்கு, சமூகத்தில் மதிப்பு பெற்று வாழ்வார்கள். செயலின் நேர்மை மற்றும் நிதானமாக இருப்பார்கள். இந்த எண்ணில் பிறந்த பெண்கள், தொட்டதெல்லாம் வெற்றியாகும். இவர்களின் ஆளுமை பண்பு காரணமாக மற்றவர்களை ஈர்க்கும் தன்மை இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு பெற்றவர்களாக இருப்பார்கள். சுற்றியுள்ளவர் ஆதரவு இருந்தும் சொந்த காலில் நின்று சாதிப்பார்கள். |
எண் 7 | 12 மாதங்களில் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் கேது ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களால் கணிக்க முடியாத செயல்களையும் செய்ய முடியும். வேடிக்கை குணம், மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவார்கள். பகுப்பாய்வு மற்றும் சிந்திக்கும் ஆற்றல் தலைமைத்துவ பயணத்தை நோக்கி அழைத்து செல்லும். தடைகளை தகர்த்தெறிய விரும்பும் இவர்கள், மற்றவர்களின் உதவிக்காக காத்திருப்பது கிடையாது. பெரும்பாலும் தனித்து செயல்படவே விரும்புவார்கள். வெற்றியோ - தோல்வியோ, தனது தனிப்பட்ட முயற்சியில் கிடைத்ததாக இருக்க வேண்டும் என்ற கர்வம் இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் கையில் எடுக்கும் முன் அதன் பின் விளைவுகள் என்ன? ஆராயும் குணம் இவர்களிடம் இருக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
