Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- உங்க துணை எப்போ பிறந்தாங்க?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட திகதிகளில் பிறந்த பெண்கள் வணிகத்தில் சிறந்து விளங்குவார்கள். அத்துடன்அவர்களை சார்ந்திருப்பவர்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள். அப்படியான பெண்கள் என்னென்ன திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1, 10, 19 மற்றும் 28 தேதிகள் | எண் கணிதத்தின் படி, 12 மாதங்களில் எண் 1-ல் பிறந்தவர்கள் தலைமைத்துவ பண்புகள் கொண்டிருப்பார்கள். இவர்கள் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். காதலில் சிறிய தடை ஏற்பட்டால் உடனே அதை கைவிட்டு விட்டு தங்களது வாழ்க்கையை பார்க்க சென்று விடுவார்கள். காதல் வாழ்க்கையில் அதிகமான வலிகளையும் சந்திப்பார்கள். |
5, 14 மற்றும் 23 தேதிகள் | எண் கணிதத்தின் படி, 12 மாதங்களில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வேடிக்கையாகவும், சந்தோஷமாகவும் வாழ விரும்புபவர்கள். இதனால் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக தெரிவார்கள். ஒரு உறவில் இருக்கும் பொழுது சலிப்பு வந்து விட்டது என்றதால் அந்த காதல் உறவை முடித்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் காதலை இழிவாக பார்ப்பார்கள். |
7, 16 மற்றும் 25 தேதிகள் | 12 மாதங்களில் எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் உள்முக சிந்தனையாளர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிக உணர்ச்சி வசப்படும் இயல்புடையவர்களாக இருப்பதால் காதலில் பிரச்சினை வந்தால் உடனே கை விட்டு விடுவார்கள். மீண்டும் மீண்டும் காயப்படுவதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் உறவை விட மன அமைதிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |