இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் 30 வயதிற்கு கோடீஸ்வரர்களாக மாறுவார்களாம். அப்படியாயின், இந்த யோகம் கொண்டவர்கள் எந்த தேதியில் பிறந்திருப்பார்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
யோகம் கொண்ட எண்கள்
எண் 5
எண் 5 -ல் பிறந்தவர்கள் வாழ்வில் மிக தைரியமானவர்களாக இருப்பார்கள். தன்னை நோக்கி வரும் சிறிய வாய்ப்பை கூட பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இவர்களிடம் இருக்கிறதுஇ அத்துடன் வாழ்வில் வரும் மாற்றங்கள் 30 வயதுக்குள்ளே அனுபவித்து விடுவார்களாம். இவர்களின் வாழ்க்கையில் பெரிய வெற்றிக் காத்திருக்கிறது. முதலில் எளிமையாக இருந்தாலும், அடுத்த பாதி வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ்வார்கள்.
அதிர்ஷ்டம் பெற்றவர்களாக இருக்கும் இவர்களில் வாழ்க்கையில் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள். கடின உழைப்பு இருப்பதால் மற்றவர்களால் தீய எண்ணங்களுடன் இவர்களிடம் வர முடியாது. 30 வயதுக்கு பிறகு நல்ல பலன் கிடைத்து, சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு செல்வார்களாம். ஆரம்ப காலங்கள் கடினமானதாக இருந்தாலும், அதற்கு பிந்தைய காலம் நல்ல மாற்றங்களை காண்பார்கள்.
5 ஆம் எண்ணில் பிறந்தவர்களில் 14ஆம் தேதியில் பிறந்திருந்தால் அவர்களின் வாழ்க்கையின் வெற்றியாளராக இருப்பார்கள். அத்துடன் அவர்களின் 30 வயதுக்கு பின்னர் நிதி நிலை உயருவதோடு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை இருக்கும். மேலும், எந்தவொரு விடயத்திற்கு பயம் கொள்ளாமல் முயற்சி செய்து முன்னோக்கி வருவார்கள்.
எண் கணிதத்தின்படி, 23ஆம் தேதி எண்ணில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்வில் நேர்மறை எண்ணம் கொண்டிருப்பார்கள். இளம் வயதில் கொஞ்சம் கஷ்டங்களை அனுபவிப்பதால் அதிர்ஷ்டம் யோகமாக வந்து சேரும். பணம், பொருள் என்று மட்டும் இல்லாமல் நல்ல மனிதர்களை பெருவதற்கான வாய்ப்புகளையும் இவர்கள் பெருவார்களாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).