chanakya: இந்த பழக்கங்கள் இருந்தால் பணக்காரர்கள் கூட ஏழையாகலாமாம்.. உங்களிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப்படி,ஒருவர் வாழ்க்கையில் வறுமை உள்ளது என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
அந்த வகையில் நாம் விடும் சிறு தவறுகள் கூட நம்மை ஏழையாகவே வைத்திருக்கலாம். அப்படியான தவறுகள் பற்றிய சாணக்கியர் என்ன கூறுகிறார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. ஒருவரிடம் அதிகமான பணம் இருக்கிறது என்றால் அதனை பூட்டி வைக்கக் கூடாது. சரியான ஒரு இடத்தில் முதலீடு செய்தால் மாத்திரமே செல்வத்தை அதிகரிக்க முடியும்.சாணக்கியரின் கூற்றுப்படி, அநீதியின் பாதையைப் பின்பற்றும் நபரிடம் பணம் ஒருபோதும் தங்காது. அநீதி பாதையில் செல்பவர்கள் அதிக பணம் பெற ஆரம்பித்தால், அவர்கள் அழிவு நிச்சயம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
2. பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் நேர்மையான வழியில் பணத்தை சம்பாரிக்க வேண்டும். தவறான முறையில் பணத்தை சம்பாரித்தால் அது நிலைக்காது என சாணக்கியர் கூறுகிறார். தவறான வழியில் பணத்தை சேமித்து வைத்தால் அதுவே காலப்போக்கில் நம்முடைய அழிவிற்கு காரணமாகி விடும்.
3. தானம் செய்வது ஒருவரின் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது. ஆனால் நமக்கானதை கையில் வைத்து கொண்டு தான் தானம் செய்ய வேண்டும். அதிகமாக தானம் செய்தால் அதுவே காலப்போக்கில் நம்மை ஏழையாக்கி விடும் என சாணக்கியர் கூறுகிறார். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து மட்டுமே செலவு செய்ய வேண்டும்.
4. செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், எவ்வளவு பணம் இருந்தாலும் அது போதாமையை ஏற்படுத்தும் என சாணக்கியர் கூறுகிறார். ஊதாரித்தனமாக இருந்தாலும் ஏழையாகவே தான் இருக்க வேண்டும்.
5. ஒரு சிலர் தன்னிடம் இருக்கும் பணத்தை நினைத்து பெருமை பட்டுக் கொண்டிருப்பார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் பணிவுடன் இருந்தால் மாத்திரமே உயரத்திற்கு செல்ல முடியும். ஈகோ புத்தி இருப்பவரின் செல்வம் விரைவில் அழிந்து விடுகிறது. எனவே ஆணவத்தைத் தவிர்த்து, உங்கள் நடத்தையில் பணிவை காட்டுவது ஒரு நல்ல பழக்கமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)