Numerology: இந்த தேதியில் பிறந்தவர்களிடம் ஜாக்கிரதை..மைண்ட் கேம் ஆடி ஜெயிப்பார்களாம்
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்கள் மைண்ட் கேம் ஆடி ஜெபிப்பவர்களாம். அவர்களிடம் மோதி யாராலும் அவ்வளவு எளிதில் வெற்றி பெற முடியாது எனக் கூறப்படுகிறது.
அப்படியான தேதியில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. எண் 3
- எண் கணிதத்தின் படி, எண் 3 -ல் பிறந்தவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
- அனைத்தும் மாதங்களிலும் சுட்டெண் 3 ல் பிறந்தவர்கள் உண்மையான அன்புடனும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள்.
- மற்றவர்களுடன் அளவோடு பழகுவார்கள். புத்திசாலித்தனத்தையும், வசீகரத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் அவர்களின் வெற்றிப்பாதையை தீர்மானிப்பார்கள்.
- இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நன்மையாகவே இருக்கும்.
2. எண் 7
- எண் கணிதத்தின் படி எண் 7 பிறந்தவர்கள் சிந்தனை, ஆன்மீகம் மற்றும் விமர்சன சிந்தனையுடன் இருப்பார்கள்.
- பொதுவாகவே அதிநவீன சிந்தனையாளர்களாக இருந்தாலும் தங்களின் பாதுகாப்பை எப்பவும் பேணுவார்கள்.
- உறவுகளில் எப்போதும் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
- அறிவுசார் திறன்களைப் பயன்படுத்தி தேவையற்றவர்களை அவர்களின் வாழ்க்கையை விட்டு வெளியேற்ற முடியும்.
3. எண் 2
- இராஜதந்திரம், உள்ளுணர்வு மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் பண்புகள் அனைத்திலும் எண் 2ல் பிறந்தவர்கள் நல்லிணக்கமாக செயற்படுவார்கள்.
- இந்த நாளில் பிறந்தவர்கள் எப்போதாவது சூழ்நிலைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள்.
- வலுவான உள்ளுணர்வு காணப்படும்.
- மற்றவர்களின் அன்பு மற்றும் விசுவாசத்தை அளவிடுவதற்கு மன விளையாட்டுகளில் வல்லவர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).