உங்களது குழந்தை பிறந்த தேதி என்ன? பெற்றோர்கள் நிச்சயம் கோடீஸ்வரர் தானாம்
எண் கணித சாஸ்திரத்தின்படி, எந்த தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு கோடீஸ்வர யோகம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குழந்தையால் பெற்றோருக்கு அதிர்ஷ்டம்
பொதுவாக எண் கணிதத்தின்படி ஒருவரது பிறந்த தேதியை வைத்தே அவர்களது அதிர்ஷ்டத்தினை கணிக்க முடியும். ஒருவரது உழைப்பு, எதிர்காலம் இவற்றினை தெரிந்து கொள்வதுடன், பெற்றோருக்கும் அதிர்ஷ்டமாக அமைகின்றது.
சில குறிப்பிட்ட தேதியில் பிறந்த குழந்தைகள் அதீத ஆற்றல் மற்றும் திறமையினைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் வளர்ந்து நிற்கும் போது பெற்றோர்களின் வாழ்க்கையும் அதிர்ஷ்டமாக மாறுமாம்.
அதாவது பெற்றோர்கள் 40 வயதை கடக்கும் தருணத்தில் குழந்தைகள் மூலமாக மிகப்பெரிய செல்வ செழிப்பு, அந்தஸ்து, மகிழ்ச்சி இவையும் வந்து சேரும்.

எந்த தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்டம்
குறிப்பிட்ட தேதியில் பிறக்கும் குழந்தைகள், நவகிரகங்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் 1,10,19,28 ஆகிய தேதியில் பிறந்தால் சூரியனின் ஆதிக்கத்தை பெற்றதுடன் தலைமை பண்பு கொண்டவராகவும் இருப்பார்கள்.
அதுவே 5, 14, 23 ஆகிய தேதியில் பிறந்த குழந்தைகள் இளவரசர் என்று அழைக்கப்படும் புதன் கிரகத்தின் செல்வாக்கை கொண்டவராகவும், அறிவுக்கூர்மை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
மேலும் 9,18,27 தேதியில் பிறந்தவர்கள் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் ஆற்றலை நிரம்ப பெற்றதுடன், துணிச்சல் மிக்கவராகவும் இருப்பார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |