Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா?
பொதுவாக சிலரின் வாழ்க்கை கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவை போன்று அமைந்திருக்கும். ஏனெனின் இவர்கள் பிறந்த எண் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
அதே சமயம் அவர்களின் வாழ்க்கையின் இலட்சியங்களையும் நிறைவேற்றும். கண்ணுக்குத் தெரியாத ஆன்மீக சக்தியில் நமது செயல்கள் நல்லவையாக மாற்றப்படுகிறது.
ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் இவைகளுடன் மேற்குறிப்பிட்ட எண்கணிதமும் தாக்கம் செலுத்துகிறது.
ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருந்தாலும் சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இறைவன் துணையாக இருப்பார்.
நியூமராலஜி படி, குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்கள், வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், தனக்கான பாதைகளில் சென்றுக் கொண்டிருப்பார்கள். அப்படியானவர்கள் என்னென்ன தேதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தைரியமானவர்கள் பிறந்த எண்கள்

| 1 | 12 மாதங்களிலும் 1,10,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்ட ரேகை உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கடவுள் பாதுகாப்பு உள்ளது. எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றிப் பெறுவார்கள். மகிழ்ச்சி மற்றும் கவலை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பார்க்கும் குணம் இவர்களிடம் இருக்கும். தீய செயல்கள் செய்வதை விரும்பமாட்டார்கள். எப்போதும் அவர்களுக்கு உண்மையாக இருப்பார்கள். ஞாபக சக்தி இவர்களுக்கு அதிகமாக இருக்கும். |
| 3 | 12 மாதங்களில் 3 எண்ணில் பிறந்தவர்கள் ஆன்மீகமானவர்களாக இருப்பார்கள். உள்ளுணர்வை கேட்டு எல்லா விடயங்களிலும் முயற்சி எடுப்பார்கள். தெய்வ சக்தியுடன் இணைந்திருப்பவர்கள் போன்று இருப்பார்கள். தெய்வீக பாதுகாப்பு, தொலைநோக்கு பார்வை மற்றும் வடிவங்களை அடையாளம் ஆகியன இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். உயர்ந்த மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். பாதுகாப்பு இவர்களுக்கு எந்த இடத்திலும் இருக்கும். |
| 7 | 12 மாதங்களில் 7 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் அதிகமான ஆற்றலுடன் இருப்பார்கள். கர்ம வினைகளுடன் இணைப்பட்டவர்களாக இருப்பார்கள். மனிதாபிமானம் கொண்டவர்களாக இருந்து ஒரு குடும்பத்தையே பார்த்துக் கொள்வார்கள். விதி, அவர்களின் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் தெய்வீகப் பாதுகாப்பு அனைத்தும் ஒன்றாக சேர்ந்து இவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்லும். பொறுப்பான மற்றும் நேர்மையான நபர்களாக இருப்பார்கள். எதிர்கால தேவைகளை புரிந்து கொண்டு அதற்கு தயாராக இருப்பார்கள். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |