வேகமாக சார்ஜ் ஆகும் 5ஜி ஸ்மார்ட் போன்கள்... முழுவிபரம் இதோ
ஒரு சில நிமிடங்களில் சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
வேகமாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட் போன்கள்
IQOO Neo 9 Pro ஸ்மார்ட்போனாது 129 W வேகமான சார்ஜிங் ஆகும் தன்மையும், 5160 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 8ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை அமேசானில் ரூ.34,999 ஆகும். கேஷ்பேச் சலுகையைப் பயன்படுத்தி விலையை மேலும் குறைக்கலாம்.
Motorola Edge 50 Pro போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் 125 W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் விலை ரூ.35,999 கிடைக்கும் நிலையில், கேஷ்பேக் மூலம் இந்த போனின் விலையை மேலும் குறைக்கலாம்.
Redmi Note 13 Pro+ ஸ்மார்ட்போன் 120w ஹைப்பர்சார்ஜ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரி உடன் வருகிறது. வெறும் 19 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுவதுடன், 8ஜிபி ரேம் ஆதரவுடன் வருகிறது. 256ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.30,999 ஆக உள்ளதுடன், அமேசானில் ரூ.3000 வரை கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கின்றது.
iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியும், 120 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ள நிலையில், வெறும் 25 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகின்றது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.29,000 என்று உள்ள நிலையில், அமேசான் மூலம் கேஷ்பேக் சலுகையையும் பெறலாம்.
IQOO 12 ஸ்மார்ட்போனானது 120W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் சந்தையில் கிடைக்கும் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் 5000 mAh பேட்டரியும் உள்ளது. இது அமேசானில் ரூ.52,999க்கு கிடைப்பதுடன் வங்கிச் சலுகையிலும் தள்ளுபடி கிடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |