செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தை வெல்லும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
செவ்வாய் கிரகம் தனது நட்பு நட்சத்திரமான சூரியனுக்கு செல்வதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், ஆற்றல் இவற்றிற்கு காரண கிரகமாக இருக்கும் நிலையில், இன்று சூரியன் நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார்.
ஜோதிடத்தின் படி செவ்வாய் கிரகமானது ரேவதி நட்சத்தில் சஞ்சரிக்கின்றார். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி கிரகங்களின் இளவரசன் என்று கூறப்படும் புதன் கிரகமாகும்.
வரும் ஜுன் 16 முதல் செவ்வாய் கிரகம் தனது நட்பு நட்சத்திரமான சூரியனுக்கு செல்வதால் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று இங்கு கீழே காணலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த காலம் ஒரு திருப்புமுனையாக இருக்கும். இந்த மாற்றத்தினால் நீண்ட நாட்கள் வராமல் இருக்கும் பணம் கைக்கு வந்து சேரும்.
வேலை செய்யும் நிறுவனத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டை பெறுவதுடன், சம்பள உயர்வும் கிடைக்கும். தங்களது பேச்சினால் எந்தவொரு காரியத்தையும் இவர்கள் சாதிப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த காலக்கட்டம் அதிர்ஷ்டமான காலமாக இருப்பதுடன், தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தக்க பலனை அடைவார்கள்.
மேலும் இவர் எடுக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு கிடைப்பதுடன், வேலை செய்யும் அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வணிக தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். ஏற்கனவே தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்கும் நீங்கள் இன்னும் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
எவ்வளவு கஷ்டமான வேலையை கொடுத்தாலும், அதனை சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். வேலையில் சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் கனவான வீடு, சொத்து போன்றவை கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த காலம் பொற்காலமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை கிடைப்பதுடன், பணியில் எதிராக இருப்பவர்கள் நல்லதொரு மாற்றத்தினை பெறுவீர்கள்.
நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால், அது சாதகமாக வருவதுடன், உழைப்பிற்கு ஏற்ற பலனையும் இந்த காலத்தில் பெறுவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |