தேவதை போன்று மனைவி கிடைக்கும் ராசிகள் யார்னு தெரியுமா?
ஜோதிடத்தில் தேவதை போன்று மனைவி கிடைக்கும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தின்படி ஒருவரது ராசியினை வைத்து அவர்களது குணங்களையும், எதிர்காலத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகின்றது. இதன் மூலம் அன்பான மனைவி, மாமியாரையும் கூட பெறுவார்கள் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் அதிர்ஷ்டமான ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் மிகவும் பொறுமையானவர்களாகவும், குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்களாம். எந்தவொரு சூழலிலும் குடும்பத்தினை விட்டுக்கொடுக்காமலும், மனைவியின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.
இதனால் இவர்களை புரிந்தவராகவும், அன்பு நிறைந்த மனைவி அமைவார்கள் என்று ஜோதிடத்தில் கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி மாமியார் வீட்டில் நம்பிக்கைக்குரிய மருமகனாகவும் மதிக்கப்படுவார்கள்.
குடும்பத்தில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளுக்கு முடிவுகள் எடுப்பதில் இவர்களின் ஆலோசனையை முக்கியமாக கேட்பார்கள். மாமியார் வீட்டில் ராஜமரியாதை கிடைக்குமாம்.

சிம்மம்
சிம்ம ராசியினர்கள் தன்னம்பிக்கை மற்றும் நேர்மை இவற்றினை தலைமைத்துவ குணங்களாக கொண்டவர்கள். குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பதில் உறுதுணையாக இருப்பதில் சிறந்தவர்கள்.
இவர்களின் இந்த குணம் மனைவியின் அன்பு, மரியாதையை அதிகரிப்பதுடன், மாமியார் வீட்டிலும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அமைதியாக கையாள்பவராக இருப்பார்கள். மாமியார் வீட்டில் மருமகனை பெருமையாக பேசுவதாக ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.

மகரம்
கடின உழைப்பாழிகளாக இருக்கும் மகர ராசியினர், முன்னேற்றத்திற்கு தொடர்ந்து முயற்சி செய்வார்கள். குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதையே முக்கிய நோக்கமாக வைத்திருப்பார்கள்.
இந்த பொறுப்புணர்வு தான் மனைவிக்கு நம்பிக்கையை கொடுப்பதாகவும், நல்ல வாழ்க்கைத் துணை என்ற எண்ணத்தை கொண்டுவரும்.

மனைவியின் விருப்பத்தினை மதித்து, குடும்பத்தில் ஒற்றுமையை முதன்மையாக பார்ப்பவராக இருப்பார்கள். மாமியார் வீட்டில் மிகவும் நம்பகமானவராக கருதப்படுகின்றனர்.
இவ்வாறு காரணங்கள் இருந்தாலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, முன்கோபத்தை கட்டுப்படுத்துதல் போன்றவற்றினை கையாண்டால் குடும்பத்தில் எந்தவொரு பிரச்சனையும் வருவதில்லை.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |