தேன்மொழி சீரியல் நடிகர் திடீர் மரணம்... அதிருப்தியில் பிரபலங்கள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்களின் அடுத்தடுத்து மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகர் நெல்லை சிவா நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அதே ரிவியில் நடிக்கும் நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆம் தேன்மொழி சீரியலில் ஜாக்லின் தந்தையாக நடித்து வந்த குட்டி ரமேஷ் காலமாகியுள்ளார். இவர் குறித்த சீரியலில் தனது அமைதியான நடிப்பினாலும், சீரியலில் ஊராட்சி மன்ற தலைவராக சுப்பையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சீரியல்களில் மட்டுமின்றி சில சினிமாவில் நடித்து வந்த இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இவரின் இறப்பிற்கு பிரபல ரிவி மற்றும் பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.