90ஸ் கிட்ஸ்களை சுவையால் கட்டிப்போட்ட தேன் மிட்டாய்: வீட்டிலேயே செய்யலாம்
பொதுவாகவே 90ஸ்களில் வாழ்ந்த இளைஞர்களுக்கு இன்னும் பல நினைவுகள் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. காலம் மாற மாற அவை எல்லாம் மறந்துப் போகும் அளவிற்கு தற்போது நவீன காலமாகி போகின்றது.
அந்தவகையில் 90ஸ்களின் நாக்கை கட்டிப் போட்ட தேன் மிட்டாய்யை அதே சுவையில் வீட்டில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி – ஒரு கப்
- உளுந்து – 1/4 கப்
- பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
- சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
- சர்க்கரை – 1 1/2 கப்
- எலுமிச்சை சாறு – 1/4 கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- சர்க்கரை – சிறிதளவு
செய்முறை
முதலில் அரிசி மற்றும் உளுந்தை பாத்திரத்தில் எடுத்து 3 அல்லது 4 மணி வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மா கெட்டிய இருக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். மா அரைத்து எடுத்துக் கொண்ட பின் அதில் எடுத்துக் கொண்ட கலரிங் மற்றும் பேக்கிக் சோடாவை கலந்துக் கொள்ள வேண்டும்.
சக்கரை பாகை தயார்படுத்தி வைத்துக் கொண்டு அதில் கொஞ்சமாக எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மாவை உருண்டையாக பிடித்து எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்து சக்கரை பாகில் சேர்த்து ஊற விட வேண்டும்.
சக்கரை பாகு நன்றாக உறிஞ்சப்பட்டவுடன் வெளியில் எடுத்தால் சுவையான தேன் மிட்டாய் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |