ஹூரோயினாக அறிமுகமாகும் தெய்வமகள் சீரியல் அண்ணியாரின் மகள்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்!
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியலான தெய்வமகள் சுமார் மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் ஹீரோவின் அண்ணியாக, வில்லியாக ரேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் ரேகா கிருஷ்ணப்பா.
இந்தத் தொடரில் அவரது நடிப்பு பலரையும் மிரள வைத்துள்ளது. இவரது கணவர் வசந்த் குமார். இவருக்கு பூஜா என்ற மகளும் உள்ளார்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அண்ணியார் ரேகா தற்போது சந்தோஷமாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவரது மகள் பெரிய திரையில் அறிமுகமாக விருக்கிறார் எனவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.