தீப்பெட்டி கணேசனின் திடீர் மறைவால் அதிர்ச்சியில் பிரபல நடன நடிகர்! குழந்தைகளுக்காக எடுத்த முடிவு
பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவரது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் குடும்பத்தாருக்குமான உதவிகளை செய்வதாக நடன நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகவா லாரன்ஸ், “நடிகர் தீப்பெட்டி கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனி வரும் காலத்திலும் என்னால் இயன்றவரையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Brother, I will take care of your children’s. Rest in peace ? pic.twitter.com/EaBsblZiMl
— Raghava Lawrence (@offl_Lawrence) March 22, 2021