துரோகம் செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?
பொதுவாகவே உலகில் அனைவரும் தம்முடன் இருப்பவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால் சின்ன சின்ன பொய்கள் ஏமாற்றங்கள் கூட உண்மையான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும். எந்த உறவாக இருந்தாலும் துரோகம் மிகவும் வேதனையான விடயமாகும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசியினர் உறவுகளை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு உறவில் ஏமாற்றுவது துரோகம் செய்வது போன்ற விடயங்கள் மிகவும் சாதாரணமாக இருக்கும். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் உறுதியற்ற மனநிலையில் இருப்பார்கள். இவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளை கையாளும் தன்மை கொண்டவர்கள்.
இந்த குணத்தால் இவர்கள் தெரிந்தே மற்றவர்களுக்கு துரோகம் செய்வார்கள். இவர்களின் மனநிலையில் இது பெரிய விடயமாக இருக்காது.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
தங்களின் சந்தோஷத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் மற்றவர்களின் உணர்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.
தனுசு ராசிக்காரர்கள் கவனக்குறைவாக இருப்பார்கள் .நெருக்கமானவர்களை காயப்படுத்தவும் துரோகம் செய்யவும் அந்த குணங்கள் வழிவகுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களின் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பல விடயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அதிகமாக விரும்புவார்கள். பிரியமானவர்களிடம் கூட எல்லா விடயங்களையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.
இந்த குணத்தால் இவர்கள் உறவுகளுக்கு துரோகம் செய்யும் நிலை ஏற்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |