விஜி இஸ் த வின்னர்... ஃபைனலிஸ்ட் விஜயலட்சுமிக்கு ஓர் குறும்படம்.... விசில் அடித்த அர்ஜூன்!
உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு ஒளிபரப்பான "சர்வைவர்" ரியாலிட்டி ஷோவில் விஜயலட்சுமி வெற்றி பெற்றிருந்தார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார்.
ஃபைனலிஸ்ட்டிற்காக நடத்தப்பட சவாலான போட்டியில் இறுதிவரை சரணும், விஜியும் சுமார் 70 நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடித்த நிலையில் ஒரு கட்டத்தில் நடிகர் சரண் தாக்கு பிடிக்க முடியாமல் தண்ணீரில் விழுந்து விட்டார்.
Bang Bang Bangggggggg.... ?
— Zee Tamil (@ZeeTamil) December 12, 2021
Annndddd The Winner is @vgyalakshmi ...?? . The Supermom becomes the sole Survivor... #SurvivorTamil #Survivor #SurvivorFinale #ZeeTamil #GrandFinale #சர்வைவர் #Kombargal #ActionKingArjun #Vijayalakshmi pic.twitter.com/0w6UulWHpS
அவர் விழுந்த அடுத்த நொடியே தொகுப்பாளர் அர்ஜுன், விஜி இஸ் த வின்னர் என்று உற்சாக குரலெழுப்பி விசில் அடித்து நடிகை விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் பேசிய நடிகை விஜயலட்சுமி, இந்த விசில் தான் சார் என்னுடைய மோட்டிவேஷன் என்று குறிப்பிட்டார்.
அவர் கடந்து வந்த வெற்றி பாதையின் குறும் படம் உங்களுக்காக,