ஈழத்தமிழர்களின் முடிவுக்கு வரா பிரச்சினை- ஆறாம் நிலம் சொல்ல வரும் விடயம் என்ன? அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு படம்!
2008-ம் ஆண்டு போருக்கு பின் ஈழமக்களின் வாழ்கையை மற்றும் அவர்களின் துன்பங்களை எடுத்து கூறும் படம் ஆறாம் நிலம். இலங்கை ராணுவத்தினால் சிறைபிடிக்கப்படும் கணவன் அவனை இழந்து வாடும் மனைவி, குழந்தை, தாய் அப்பா இல்லாமல் அந்த பெண் குழந்தை படும் கஷ்டம்.
ஆண்துணை இல்லாமல் இருக்கும் பெண் அவளுக்கு ஏற்படும் இன்னல்கள் என ஈழ மக்களின் முடிவுக்கு வராத இன்னல்களை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கும் ஆறாம் நிலம் வரவேற்கத்தக்கது.
ஈழ மக்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் விதத்தில் போர் நடந்த பகுதிக்கவே சென்று படம்பிடித்துள்ளது படத்தின் சிறப்பு இன்னும் ஈழ தமிழர்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிறார்கள் என படமாக்கிய விதம் சிறப்பு போரின் போது வைக்கப்பட்ட கண்ணிவெடியால் இன்றும் ஏற்படும் உயிரிழப்புகள் மக்களின் நிலை என அனைத்தையும் சிறப்பாக காட்டியுள்ளது இந்த ஆறாம் நிலம்.