ஆடி மாதத்தில் மட்டும் சுபகாரியங்கள் நடைபெறாதது ஏன்?
இந்துக்கள் ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் வீட்டில் செய்யாததற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆடி மாதம்
ஆடி மாதத்தில் சுப காரியங்கள் மற்றும் தெய்வ சடங்குகள் என்பவை அதிகமாக காணப்படும். இப்படி இந்த மாதம் ழுமையாக தெய்வத்திற்கு அர்ப்பணிக்கும் போது ஏன் சுபகாரியங்களை தடை செய்கிறார்கள் என்ற கேள்வி இருக்கும்.
இதற்கான காரணம் இந்த மாதம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் தேவை இருப்பதால் அது தடையாகி விட கூடாது என இந்த சுப காரியங்களை சற்று விலகி இருக்கின்றனர்.
இது ஒரு வழக்கமாகவே வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அனைத்து கோவில்களிலும் தொடர்ந்து விசேஷ நிகழ்வுகள் நடைபெறுவதால் குருக்கள் முதல் பூசாரி வரை அனைவரும் பிஸியாக இருப்பர்.
அதனால் அவர்களை அழைத்து சுபகாரிங்கள் செய்யவது என்பது சற்று கடினமாக இருக்கும். இந்த மாதத்தில் புது மண தம்பதிகளை பிரிப்பதற்கான காரணம் ஆடி மாதத்தில் பெண் கருவுற்றால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.
கோடை காலமான சித்திரை மாதத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது பிறக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் ஒரு இதமான காலமாக இருக்காது. அதனால் ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளைப் பிரிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இந்த மாதம் பல முக்கிய வேலைகள் சிறப்பான விஷயங்கள் செய்வதில் இது முன்வரமாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |