ரத்தத்தில் நனைந்த தங்க காசுகள்... சூர்யா படத்தின் அசத்தல் போஸ்டர்
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பி்ல் வெளியாகவிருக்கும் படம் தான் கங்குவா. இந்த படம் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
நடிகர் சூர்யா
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார் சூர்யா. இவர் நடித்த பல திரைப்படங்கள் பெரும் வெற்றி கண்டுள்ளது.
இந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் படம் கங்குவா என்பதாகும். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என்பவராவார். இது 3 டி படமாக உருவாக்கப்டுகின்றது.
இந்த படத்தை 10 மொழிகளில் வெளியாக்க உள்ளார்கள். அந்த வகையில் இந்த படத்தின் புதிய அப்டேட் போஸ்டர் வெளியாகியுள்ளது. வலிமைமிக்க 'உதிரன்' நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
ரத்தத்தில் நனைத்த தங்க காசுகளை ஒரு கையில் பிடித்த இந்த போஸ்டர் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.