Live ல் ஓவியாவிற்கு முத்தம் கொடுத்த நபர் ? குழப்பத்தில் நெட்டிசன்கள்
ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
ஓவியா
கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்த களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து கலகலப்பு, முத்துக்கு முத்தாக, மதயானைக்கூட்டம்,யாமிருக்க பயமே, புலிவால், சண்டமாருதம், ஹலோ நான் பேய் பேசுறேன், காஞ்சனா-3 என பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதன் பின் ஓவியா விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பேவரைட் ஆனார்.
காதல் சர்ச்சை
அதன் பின் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு சக போட்டியாளரான ஆரவ் உதவிக்கரம் நீட்ட, ஓவியாவுக்கு ஆரவ் மீது காதல் மலர்ந்தது.
அதேசமயம் தனக்கு ஓவியா மீது காதல் எல்லாம் இல்லை என ஆரவ் சொல்ல உடைந்து போனார். பின் பாதியிலேயே போட்டியை விட்டு வெளியேறினார்.
வைரலாகும் வீடியோ
இதன் பின் சின்னத்திரை நிகழ்சியிலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைக்காட்டி வரும் ஓவியா அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்.
தற்போது நடிகை ஓவியா வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் நடிகை ஓவியா பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தீடீரென ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்குமாறு வந்தார்.
இதனை நடிகை ஓவியா தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை கண்ட நெட்டிசன்கள் ஓவியாவுடன் நெருக்கமாக இருப்பது ஆவர் காதலரா, திருமணம் செய்து கொள்ள போகின்றனரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.