ஒரு போத்தல் தண்ணீரின் விலை 4 லட்சத்து 18 ஆயிரமா? அப்படியென்ன ஸ்பெஷல்
உலகில் மிகவும் அதிகமாக விலைகொடுத்து வாங்கக்கூடிய தண்ணீர் போத்தலின் முழு விபரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விலையுயர்ந்த தண்ணீர் போத்தல்
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படை தேவையாக இருப்பது தண்ணீர். இந்த தண்ணீரை சிலர் விலைகொடுத்து வாங்குகின்றனர்.
இது முதன் முதலாக பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட தண்ணீராகும். இந்த தண்ணீர் போத்தல் முழுவதுமாக தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும்.
இது 750 மி.லி. கிட்டத்தட்ட 60,000 ரூபாய் மதிப்புடையது. இதை உருவாக்கியவர் அல்ட்டா மினோரா ஆவார். அதுமட்டுமல்லாமல் 2010ல் இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. இதன்படி தற்போது இது பல நாடுகளிலும் காணப்படுகிறது.
இது தவிர ஜப்பானில் தயாரிக்கப்படும் 'Fillico Jewelry Water' இலங்கை மதிப்பின்படி 4 லட்சத்து 18 ஆயிரமாகும். இந்த குடிநீர் மிகவும் சுத்தமாக இருப்பதுடன் இது ஆடம்பரமான போத்தல்களிலும் உருவாக்கப்படுகிறது.
இந்த போத்தல்கள் விலை உயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி கற்களால் ஆபரணம் போல வடிவமைக்கப்படுகின்றன. தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட, உன்னிப்பாக கவனத்துடன் கைகளால் செய்யப்பட்டிருக்கும் போத்தல்களாகும்.
இதனாலாலேயே ஆடம்பரத்தை விரும்புவோர் இதை பணத்தை அள்ளி கொடுத்து வாங்குகின்றனர். இது உடலின் வெப்பத்தை தணிப்பதற்காக குடிப்பதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |