Viral Video: ஆர்பரிக்கும் வெள்ளத்தில் யானை மீது நின்று உயிர் தப்பும் சிறுத்தை.... மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
ஆர்பரித்து ஓடும் வெள்ளத்திற்கு மத்தியில் நின்று கொண்டிருக்கும் யானையின் மீது சிறுத்தை ஒன்று உயிர் தப்பும் காட்சி வைரலாகி வருகின்றது.
யானை மீது சிறுத்தை
பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதம் என்று வந்துவிட்டாலே புயலும் கூடவே வந்துவிடுகின்றது. மேலும் அடைமழை காலமாக இருப்பதுடன் பல நாடுகள், மாநிலங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படும்.
இந்த வெள்ளப்பெருக்கின் போது கேரளா போன்ற மாநிலங்களில் காடுகளில் வாழும் விலங்குகளும் நீரில் அடித்து வரப்படுகின்றது.
மேலும் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளும் இதுபோன்று எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றது. மழை வந்துவிட்டால் நிலச்சரிவு அபாயமும் ஏற்பட்டுவிடுகின்றது.

இங்கு காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது ஆர்பரித்து ஓடும் வெள்ளத்திற்கு மத்தியில், யானை ஒன்று நின்று கொண்டிருக்கின்றது.
இந்த யானையின் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது. இக்காட்சி மிகவும் அரிதாக காணப்பட்டாலும், பார்வையாளர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கின்றது.
குறித்த காட்சி எப்பொழுது எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும், பார்வையாளர்கள் இக்காட்சியினை வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது டிட்ரா புயலின் தாக்கத்தினால் மழை அதிகமாக பெய்து வரும் நிலையில், இக்காட்சி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |