62 வருடங்கள் தூங்காமல் உயிர்வாழும் விவசாயி! அறிவியலுக்கே சவால்விடும் வினோதமான காரணம்
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மற்றும் உடற்பயிற்ச்சி எந்தளவு முக்கியமோ அதே அளவு சிறந்த தூக்கமும் இன்றியமையாதது.
நிம்மதியான தூக்கம் அனைவருக்கும் முக்கியம். முறையற்ற தூக்கம் அல்லது தூக்கம் இன்மை பிரச்சினைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரமன்றி உள ஆரோக்கியத்திலும் பாரிய பாதக விளைவுகளை ஏற்பத்தும் என்பது அனைவதும் அறிந்ததே.

பொதுவாக ஒரு இரவு சரியான தூக்கம் இல்லாவிட்டாலே மறு நாள் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும்.ஆனால் ஒருவர் 62 ஆண்டுகளாக தூக்கமின்றி வாழ்கின்றார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
அறிவியல் ரீதியில் சில நாட்களுக்கு மேல் தூக்கமின்றி உயிர் வாழவே முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இருப்பினும் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய இந்த நபர் குறித்த தகவல்களை விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
62 ஆண்டுகள் தூங்காத நபர்
வியட்நாமைச் சேர்ந்த 81 வயதான நொகோக், 1962-ம் ஆண்டு கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். அன்றிலிருந்து இத்தனை வருடங்களாக ஒரு நொடி கூட கண் மூடி தூங்கவில்லை என்று அவரே குறிப்பிடுகின்றார்.

நோகோக் இத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல், தனது பண்ணையில் தொடர்ந்து வேலையும் செய்து வருகின்றார். அவரின் அன்றாட வேலைகளோடு சேர்ந்து வயலிலும் தீவிரமாக உழைக்கிறார்
குறித்த காய்ச்சல் ஏற்பட்டதன் பின்னர் இத்தனை வருடங்களில் அவர் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவித்ததேயில்லையாம். அறிவியலுக்கே சவால் விடும் இவரின் பிரச்சினையை பார்த்து மருத்துவர்களே வியப்படைகின்றனர்.

வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள சிறிய கிராமத்தில் 1942-ம் ஆண்டு பிறந்த நோகோக், வியட்நாம் போரின்போது தனது 20 வயதின் போதே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் சரியான பின்னர் அவரது தூக்கம் மீண்டும் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பவில்லையாம். "பல மருந்துகளை உட்கொண்டேன். வீட்டு வைத்தியங்களை முயற்சித்தேன். தூக்கம் வருமென்று மதுவும் அருந்தினேன் ஆனாலும் தூக்கம் மட்டும் வரவில்லையாம்.

அவர் சொல்வது உண்மைதான் என அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் ஆகியோர் உறுதிப்படுத்துகின்றனர். அவர் தூங்குவதை இதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.
இந்நிலையில் அவரது அசாதாரண வாழ்க்கை கதை சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது மில்லியன் கணக்கானவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |