சாக்ஸ் மட்டும் அணிந்து மேடையேறிய இயக்குநர்! வைரலாகும் வீடியோ..
பிரின்ஸ் பட இயக்குனர் அனுதீப் சாக்ஸ் மட்டும் தான் அணிவதாகவும் இவர் பாதணி அணிய மாட்டார் எனவும் சிவகாரத்திகேயன் சுட்டிக்காட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரின்ஸ் திரைப்படம்
தமிழர்களின் முக்கிய பண்டிகை தினமான தீபாவளி தினத்தன்று திரையுலகையே கலக்கவிருக்க படமாக எஸ்கேவின் 'பிரின்ஸ்' திரைப்படம் பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் இந்தியன் பையன், பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பதாக கொண்டு கதை நகர்த்தப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் என கூறும் பொழுது திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் நன்கு பழகியவர்களான சத்தியராஜ் மற்றும் சூரி என்போரைக் கொண்டு உருவாகியுள்ளார்.
அனுதீப்
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரின்ஸ் பட வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர் அனுதீப், சாக்ஸ் மட்டும் அணிந்து வந்திருந்தார் இதனை மேடையில் வைத்து, இவர் சாக்ஸ் மட்டும் தான் அணிவதாகவும் இவர் பாதணி அணிய மாட்டார் எனவும் சிவகாரத்திகேயன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை இணையவாசிகள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.