இறப்பிலும் இணைபிரியா தம்பதியினர்: கணவன் இறந்த மறுநாளே மனைவியும் இறப்பு!
தமிழகத்தில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் மறுநாளே மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த தம்பதியினர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்தவர்கள் டேனியல் பாலகிருஷ்ணன் - வெண்ணிலா தம்பதியர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த தம்பதியினர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவர்.
டேனியல் பாலகிருஷ்ணன் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணனின் உடலுக்கு நேற்று இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
அப்போது பாலகிருஷ்ணனின் மனைவி வெண்ணிலா வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருடைய உடலும் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கணவர் இறந்த துக்கம் தாளாமல் மறுநாளே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.