கணவன் இறந்த மறுநாள் மனைவியும் திடீர் மரணம்! கடைசிவரை கணவன் இறந்தது தெரியாமல் இருந்த சோகம்
கொரோனாவின் 2ம் அலை இந்தியாவில் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நாள்தோறும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கணவன் இறந்தது தெரியாமல் மனைவியும் கொரோனாவால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் காட்பாடியிலுள்ள டாஸ்மாக் எலைட் மதுக்கடையில் பணிபுரிந்து வந்தவர் சிவராஜ் (வயது 45). இவரின் மனைவி பாமா (38). இந்தத் தம்பதிக்கு 10 வயதில் இமான், 7 வயதில் ஜோயல் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவராஜ், பாமாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி சிவராஜ் உயிரிழக்க, அடுத்த நாளே பாமாவும் உயிரிழந்தார், கணவன் இறந்தது கூட பாமாவுக்கு தெரியாதாம்.
பெற்றோர் இருவரும் உயிரிழந்துவிட்டதால், செய்வதறியாது கலங்கி நிற்கிறார்களாம் அவர்களது பிள்ளைகள், இந்த சின்ன வயதிலேயே இப்படியொரு சோகமா என கதறித்துடிக்கின்றனர் உறவினர்கள்.