காதலிக்கு ஏன் சிவப்பு ரோஜா கொடுக்குறாங்க தெரியுமா? அப்போ இந்த ரகசியம் உங்களுக்காக தான்!
பொதுவாக பூக்களுக்கு அதிபதியாக ரோஜாக்கள் தான் பார்க்கப்படுகின்றது.
ஏனெனின் ரோஜாக்களை விரும்பாத நபர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
வாசனை, நிறம், தோற்றம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் பூ தான் ரோஜா.
உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றி என மனித வெளிப்பாட்டிலும் இந்த ரோஜா இருக்கின்றது.
அந்த வகையில் ரோஜாக்களின் நிறங்களுக்கேற்ப தனித்துவமான குணங்களையும் கொண்டுள்ளன. இது குறித்து இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
ரோஜாக்களின் நிறங்களும் குணங்களும்
1. பீச் வண்ண ரோஸ்
நாம் ரோஜாக்களில் பார்க்கின்ற மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறங்களை பிரதிபலிக்கும் நிறம் தான் பீச். இது நன்றியை வெளிப்படுத்த பயன்படுகின்றது. அதாவது அடக்கம், அனுதாபம் போன்ற சடங்குகளுக்கு பயன்படுத்துவார்கள்.
2. மஞ்சள் ரோஸ்
மஞ்சள் நிற ரோஜா பூக்கள் நட்பையும் அதிலிருந்து வரும் மகிழ்ச்சியையும் குறிக்கின்றது. நண்பர்களுக்கு இடையில் இருக்கும் அன்பை வெளிப்படுத்த இந்த பூக்களை கொடுப்பார்கள்.
3. ஆரஞ்சு ரோஸ்
உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சி ஆகியவற்றின் வெளிபாடாக ஆரஞ்சு நிற ரோஜாக்கள் பார்க்கப்படுகின்றது. அத்துடன் ஈர்ப்பையும் வெளிப்படுத்துகின்றது.
4. வெள்ளை ரோஸ்
எப்போதும் தாய்மையில் இருக்கும அன்பு தூய்மையாக இருக்கும். இதன்படி, வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய துவக்கம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.
இதிலிருக்கும் தூய்மையான வெள்ளை கலங்கம் இல்லாத அன்பை குறிக்கின்றது.
5. இளஞ்சிவப்பு ரோஸ்
இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் இரண்டு வகைகளில் காணப்படுகின்றது. அந்த வகையில், வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும், அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |