சுற்றுலா பயணிகளுக்கு பெண் சிங்கம் கொடுத்த ஷாக்! ஒரு நிமிடம் அசந்து போய் நின்ற நெட்டிசன்கள்
விலங்குகளின் பாசத்தை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.
பொதுவாக நாய், பூனை தவிர்ந்து மற்றைய விலங்குகளை பார்த்தால் சற்று பயமாக தான் இருக்கும்.
ஏனெனின் அவை நம்மை தாக்கும் என பயம். ஆனால் அவை உள்ளத்திலும் பாசம் இருக்கிறது என்பதற்கு கீழ் வரும் வீடியோ சிறந்த உதாரணமாகும்.
பெண் சிங்கத்தின் பலமான வரவேற்பு
அந்த வகையில், காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென ஓடி வந்து பெண் சிங்கமொன்று வண்டியில் ஏறி அமர்க்கலப்படுத்தியுள்ளது.
குறித்த சிங்கம் காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் வண்டியில் ஏறி, பயணிகளை பாசமாக நக்கி, வரவேற்றுள்ளது.
இதனை பார்த்த பயணிகள் ஆரம்பத்தில் பயந்தாலும், சிறிது நேரத்திற்கு பின்னர் சிங்கத்தின் அன்பை புரிந்துக் கொண்டுள்ளனர்.
image - GETTY IMAGES
நடந்தது என்ன?
தொடர்ந்து பெண் சிங்கம் சிறிது நேரம் அவர்களுடன் பயணத்தை தொடர்ந்து விட்டு சென்றுள்ளது. ஆனால் யாருக்கும் எந்தவிதமான தீங்கையும் விளைவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வீடியோ காட்சியை வண்டியிலிருந்த பயணியொருவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்புடுத்தியுள்ளது.
New wildlife experience ? pic.twitter.com/1J74oTKgWW
— OddIy Terrifying (@OTerrifying) November 8, 2022