சத்யராஜுடன் இருக்கும் இந்த குட்டி சிறுவன் யாருனு தெரியுமா?
நடிகர் சத்யராஜுடன் இருக்கும் ஒரு சிறிய குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
இந்த படத்தில் இருக்கும் சிறுவன் தற்போது ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் பிரபல நடிகையின் கணவராகவும் உள்ளார். தமிழ் சினிமாவில் சில படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை இவர் பெற்றுள்ளார்.
இவர் வேறு யாரும் இல்லை நடிகர் பகத் பாசில் தான் சத்யராஜுடன் இருக்கும் அந்த சிறுவன். தற்போது இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரது குடும்பம் ஒரு சினிமா பின்னணியாகும்.
இவரது தந்தை காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, பூவிழி வாசலிலே, பூவே பூச்சூடவா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
41 வயதாகும் பகத் பாசில், பிரபல நடிகை நஸ்ரியாவை 2014 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இது மட்டுல்லாமல் நடிப்பதுடன், Fahadh Faasil and Friends என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் பகத் பாசில் தயாரித்து வருகிறார். சமீபத்தில் வந்த புஸ்பா படத்தில் வில்லனாக நடித்து அனைவர் மனதையும் கவர்ந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |