காதல் மனைவியை விவாகரத்து செய்யும் பில்கேட்ஸ்! கூகுளில் மக்கள் எதை தேடியுள்ளார்கள் தெரியுமா?
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) அவரது மனைவி மெலிண்டாவும் (Melinda) தங்களின் விவாகரத்து குறித்து அறிவித்துள்ளனர்.
27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக பில் கேட்ஸ் (Bill Gates) தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“மெலிண்டா கேட்ஸ் 1987-ம் ஆண்டு சந்தித்து 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம்.
திருமணத்துக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம்.
எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என தெரிவித்துள்ளனர்.
— Bill Gates (@BillGates) May 3, 2021
சியாட்டிலில் கோர்ட்டில் பதிவு செய்த விவாகரத்து விண்ணப்பத்தில், “திருமணம் மீட்க முடியாது முறிந்து விட்டது” என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமானது.
அவர்கள் பிரிந்தது பற்றி மக்களுக்குக் கவலையில்லை. அந்த பெரிய சொத்துக்களை எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதில்தான் மக்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது.
கடந்த ஒரு நாளில் கூகுள் இந்தியாவில் தேடப்படும் விவரம் என்னவெனில் ‘மைக்ரோ சாஃப்ட் ஷேர் பிரைஸ்’ என்று தேடி வருகின்றார்களாம்.