புகைப்பழக்கம் ஏற்பட இது தான் காரணம்: மனம் திறந்த ஷகிலா!
சினிமா உலகில் கவர்ச்சி கன்னியாக வலம்வரும் ஷகிலா மலையாள படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இன்றும் அவரது பெயரைக் கூறினால் முதலில் நினைவுக்கு வருவது அவரது கவர்ச்சியான நடிப்பு தான்.
கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.இந்த நிகழ்ச்சி இவரின் இன்னொரு பக்கத்தை வெளிப்படுத்தியது.
அது மட்டுமின்றி, பிக் பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்ட ஷகிலா புகைப்பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புகைபழக்கம் ஏற்பட காரணம்
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷகிலா புகைப்பழக்கம் தொடர்பில் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் சிகரெட் பிடித்தது அதற்கான ரூமில் சென்று தான். அங்கு கேமரா இருந்தது அதனை மறைக்க நான் சொல்லியும் மறைக்கவில்லை பிறகு நான் சிகரெட் குடித்தது வெளிய தெரிந்தது.
என்னை பிடித்தவர்களுக்கு நான் அப்படி செய்தது வருத்தமாக இருக்கும். நான் அதற்கு இந்த நேரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், இந்த மாதிரி எல்லாம் அன்பு கிடைப்பதற்கு முன்னாடி ஒரு 30 வருடங்களாக எனக்கு நண்பனாகவும் சிறந்த துணையாகவும் இருந்தது இந்த புகைப்பழக்கம் தான் என கூறி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.
இதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் அப்போ நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் அந்த அளவிற்கு தனிமையாக இருந்த காரணத்தால் தான் ஷகிலாவுக்கு புகைபிடிக்கும் பழக்கம் வந்திருக்கும் என கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |