இனி சுவற்றில் சிறுநீர் கழித்தால் அவ்வளவுதான்!!! லண்டன் மக்களின் புதிய யுக்தி

Kishanthini
Report this article
லண்டனின் பொது இடத்தில் சிறுநீர் கழிக்காத வண்ணம் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சில் என்ற பகுதியில் பொதுமக்கள் பலரும் சாலையோரம், சுவற்றில் சிறுநீர் கழித்துவிட்டு செல்வதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதிவாசிகள் புகார்கள் கொடுத்து வந்தனர். ஆனால் ஒன்றும் சரியாகவில்லை.
அதன் பின் அந்த பகுதியிலுள்ள அதிகாரிகள் புதிய யுக்தியை ஒன்றை கையாண்டுள்ளார்.
புதிய யுக்தி
அதன்படி அங்கிருக்கும் குறிப்பிட்ட உணவகங்கள், திரையரங்குகள் என சில இடங்களில் சுவர்களின் ஒரு ரசாயனம் கலந்த ஸ்பிரே அடித்து பெயிண்ட் அடித்துள்ளனர்.
இந்த பெயிண்ட் சாலையில் அடிக்கப்பட்டால், சிறுநீர் கழிக்கும்போது, அதே நீர் அவர்கள் மீது திருப்பி தெளிக்குமாம். அதனால் இந்த ஸ்பிரே பெயிண்டை அடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதோடு சுவர்களில் இந்தச் சுவர் சிறுநீர் கழிப்பிடம் இல்லை என்ற செய்தியுடன் அறிவிப்பு பதாகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் அங்கு சிறுநீர் கழிக்கவரும் வரும் நபர்கள் திரும்பி சென்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.