இலங்கை தர்ஷனுடன் பிறந்தநாள் கொண்டாடடிய லொஸ்லியா! குவியும் வாழ்த்துக்கள்
ஈழத்து பெண் லொஸ்லியா அவரின் பிறந்த நாளை தர்ஷன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இது குறித்த வீடியோ ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.
குவியும் பட வாய்ப்புகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை லொஸ்லியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதுமட்டுமின்றி அவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கூகுள் குட்டப்பா படம் மிக விரைவில் வெளியாகி உள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
