பியூட்டிஃபுல் ஜர்னியாக இருந்தது…. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரியோ வெளியிட்ட வீடியோ! ஒரே குஷியில் ரசிகர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளரான ரியோ ராஜ் ஒரு வழியாக ஹேப்பியாகி போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் என்டர்டெயினராக நுழைந்த ரியோ வெளியே வரும் போதும் என்டர்டெயினர் விருதுடனே விடைப்பெற்றார்.
ரிதி பாப்பாவின் போட்டோவை பார்த்தே பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ரியோ, வீடியோவில் மட்டுமே சில நேரங்களில் குழந்தையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
Thank you so much for all the Love and Positivity ?
— Rio raj (@rio_raj) January 20, 2021
Take ittu ? everybody ?#biggbosstamil #biggbossseason4 #takeittu #rioraj @vijaytelevision pic.twitter.com/q9QYPNgi3b
பாசத்தால் பிணைந்த தந்தையான ரியோ ராஜ், வீட்டுக்கு வந்தவுடன் ரிதி பாப்பாவை தூக்கிக் கொஞ்சும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரியோவின் சோகத்தையும் ரிதி ஒரு கணத்தில் மாற்றிவிட்டாள். பிக் பாஸ் தமிழ் சீசன் 4 எனக்கு ஒரு பியூட்டிஃபுல் ஜர்னியாக இருந்தது.
வெளியே வந்து பார்க்கும் போது, இவ்ளோ லவ் மற்றும் சப்போர்ட் கொடுத்த ரசிகர்களால் ரொம்பவே ஹேப்பி ஆகிட்டேன். நிறைய விஷயங்கள் இருக்கு ஒழுங்கா பிளான் பண்ணி பண்ணலாம்னு இருக்கேன் என அந்த வீடியோவில் ரியோ கூறியுள்ளார்.
ரியோ ராஜ் சிறந்த என்டர்டெயினராகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தார் என்றும் ரியோவின் நல்ல மனசுக்கு வெளியே ரியல் வெற்றி கிடைக்கும் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.