Tamizha Tamizha: பிற மொழிகளில் கணவர்களை திட்டும் மனைவிகள் அதற்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் கணவர்கள்!
கணவர்களுக்கு தெரியாத பிற மொழிகளில் மனைவிகள் திட்டும் போது அதற்கு கணவர்கள் அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டும் என இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சி ப்ரொமோ வெளியாகி உள்ளது.
Tamizha Tamizha: பார்த்த முதல் நாளே இங்கிலீஷ் பட முத்தம்! காதலன் செயலை அரங்கத்தில் போட்டுடைத்த காதலி
தமிழா தமிழா
பிரபல டிவியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஆவுடையப்பன். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மாறுபட்ட தலைப்புகளை எடுத்து அதை தொகுத்து வழங்கி வருகின்றது.
அந்த வகையில் இந்த வாரம் ரியல் காதல் காவியங்களை கொண்டாடும் அரங்கமாக தமிழா தமிழா மேடை மாற உள்ளது. இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் மதம், இனம், நாடு, மொழி இவற்றையெல்லாம் கடந்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகளின் காவியமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இப்படி மொழி மதம் சாராமல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் கணவர்கள் தமிழகத்தை சேர்த்து இருக்கின்றனர். இதன்போது காதலுக்கு பாஷை எல்லாம் கிடையாது எனவும் பேசியுள்ளனர். இப்படியாக இந்த வார ப்ரொமோ வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |