அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் போட்ட கண்டீஷன்! இதற்கு ஆக்ஷன் கிங் ஓகே சொல்லுவாரா?
தன்னுடைய வருங்கால மருமகளுக்கு நடிகர் தம்பி ராமையா போட்ட கண்டிஷன் விடயம் சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.
ஆக்சன் கிங் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன்.
இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முக திறமைக் கொண்டவர்.
இதனை தொடர்ந்து சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த “சர்வைவர்” நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார்.
இவர் கடைசியா லியோ படத்தில் விஜயிற்கு சித்தப்பாவாக நடித்து மக்கள் மனதில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்து விட்டார். இதனிடையே அர்ஜீனுக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் சினிமாவில் இருக்கும் போதே 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
மாமனார் போட்ட கண்டிஷன்
மூத்த மகள் பெயர் ஐஸ்வர்யா இவர் விஷால் நடிப்பில் வெளியான “பட்டத்து யாணை” திரைப்படத்தில் நடித்திருப்பார். ஆனாலும் இந்த திரைப்படம் வரவேற்பை கொடுக்காத காரணத்தினால் சினிமா வாழ்க்கையிலிருந்து திருமணம் வாழ்க்கைக்குள் செல்லவிருக்கிறார்.
இவர் நடிகர் தம்பி ராமையாவின் மகனை நீண்ட நாட்கள் காதலித்து வந்தார்.
இதனையறிந்த பெற்றார்கள் இருவீட்டாரும் பேசி இருவருக்கும் நிச்சியம் செய்துக் கொண்டுள்ளனர். நிச்சியம் முடிந்த கையோடு மாமனார் ஒரு கண்டிஷனை போட்டுள்ளார்.
அதாவது, எந்த காரணம் கொண்டும் ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு நடிக்க வரக்கூடாது.
ஐஸ்வர்யாவும், உமாபதியும் புது தம்பதிகள் என்பதால் சினிமாவின் மூலம் பல வகையான பிரச்சினைகள் வெடிக்கும் என்ற பயத்தில் இவர் இப்படியோரு கண்டிஷனை போட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |