பிக் பாஸ் தாமரையின் கணவர் வெளியிட்ட விவாகரத்து பதிவு! குழப்பத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரை தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தாமரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற தாமரைச்செல்வியின் கணவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு 98 நாட்கள் இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தாமரைச் செல்வி. இவரது கணவர் இன்ஸ்டாவில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஆம் தவறான புரிதல், கருத்து வேறுபாடு காரணமாக மனமொத்து பிரிந்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், இனி தங்களது Privacy மற்றும் தனிப்பட்ட முடிவுகளை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்த போஸ்ட் தவிர தாமரையும் இருந்த அனைத்து போஸ்ட்டையும் நீக்கியுள்ளார் பார்த்தசாரதி. மேலும் இவரது ஸ்டோரியிலும் விவாகரத்து குறித்து தான் வைத்துள்ளார்.

ஆனால் தாமரையின் இன்ஸ்டாவில் எந்தவொரு பதிவும் வெளியாகவுமில்லை, பழைய போஸ்ட் எதுவும் அழிக்கப்படவும் இல்லை. ஆதலால் தாமரைக்கு இந்த விவாகரத்தில் விருப்பமில்லையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து தாமரைசெல்வி விரைவில் பதில் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். தாமரை சின்ன மருமகள் சீரியலில் நடித்து வந்த போது, குறித்த சீரியலில் நடிகை ஸ்வேதாவின் கணவர் தன்னிடம் நகையை வாங்கி ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |