தாமரை நீங்க வந்த ஆட்டோ வெளியில் ஓரமா தான் இருக்குது: பிக்பாஸ் கொடுத்த ஷாக்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று பிரபல ரிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நிறைவுபெற இருக்கும் பிக்பாஸின் வெற்றியாளரை காண மக்கள் பெரிதும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் கிராண்ட் பினாலே ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதில் தாமரையாக நாஞ்சில் விஜயன் நடிப்பில் அசத்தியுள்ளார்.
தாமரையாக நடித்ததைக் கேட்ட பிக்பாஸ் தாமரை நீங்கள் வந்த ஆட்டோ இன்னும் வெளியில் தான் இருக்கின்றது என்று அரங்கத்தினை அதகளப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த சீசனில் கொடுக்கப்போகும் ட்ராபியையும் இரண்டாவது ப்ரொமோவில் காட்டப்பட்டுள்ளது. ஓரளவிற்கு ராஜு தான் டைட்டில் வின்னர் என்று தெரிந்தாலும், அதனை பிரபல ரிவியில் நிகழ்ச்சியாக காண்பதற்கு மக்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.